ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தொிவிக்கலாம்; போலீசார் தகவல்.

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தொிவிக்கலாம்; போலீசார் தகவல்.

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தொிவிக்கலாம்; போலீசார் தகவல்.

தமிழகத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த ஆண்டில் (2025) கடந்த ஜனவரி மாதம் முதல் 31-ந் தேதி வரை தமிழகத்தில் 6,025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 2,342 டன் ரேஷன் அரிசி, 13,720 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய், 1,725 கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் இதர 64 வழக்குகளுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடியே 84 லட்சத்து 41 ஆயிரத்து 328 ஆகும். இவ்வழக்குகளில் தொடர்புடைய 6,272 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,362 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 70 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் அரிசி உள்பட அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button