வடக்கம்மாப்பட்டினத்தில் இளவயது நீரிழிவு புற்றுநோய் காரணங்களை கண்டறிந்து தடுக்க வேண்டும்; தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீர்மானம்.

வடக்கம்மாபட்டினத்தில் இளவயது நீரிழிவு புற்றுநோய் காரணங்களை கண்டறிந்து தடுக்க வேண்டும்; தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீர்மானம்.

வடக்கம்மாப்பட்டினத்தில் இளவயது நீரிழிவு புற்றுநோய் காரணங்களை கண்டறிந்து தடுக்க வேண்டும்; தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீர்மானம்.

புதுக்கோட்டை மாவட்டம் வடக்கம்மாபட்டினம் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் சித்தீக் ரகுமான் தலைமை வகித்தார். மாநில செயலாளர் முஹம்மது ஒலி மற்றும் பேச்சாளர் அப்துர் ரஹ்மான் சிறப்புரையாற்றினார்கள்.

இதில் மாவட்ட செயலாளர் முகமது மீரான், துணைச் செயலாளர் ஷேக் அப்துல்லா, கிளை தலைவர் அமீர் அப்பாஸ், பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இறுதியாக நன்றி உரை மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரஹ்மத்துல்லா நன்றி கூறினார்.

மேலும் இந்த கூட்டத்தில் இந்திய உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு வக்ப் வாரிய திருத்தச் சட்டத்தின் பல்வேறு
நடைமுறைகளுக்கு இடைக்கால தடைவிதித்துள்ளது வரவேற்கத்தக்கது, இந்த சட்டத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும், நடுநிலை இந்து கிறிஸ்தவ சகோதரர்கள் இந்த வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட வேண்டும், இந்த சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் ஓயாது, நமது போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும், வடக் கம்மாபட்டினத்தில் தென்றல் நகர் செல்லும் கிராவல் சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும், பெண்கள் மதரஸாவிலிருந்து கடற்கரைக்கு செல்லும் மழைநீர் வடிகால் கால்வாயை சுத்தம் செய்து முழுமையாக மேல்மூடி அமைத்து தர வேண்டும், நடுநிலை பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் இறால் பண்ணைகள் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் என்பதை
கருத்தில் கொண்டு குடியிருப்பு பகுதி இல்லாத இடத்தில் அமைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண்கள் மதரஸா அருகில் உள்ள மின்மாற்றி கம்பங்கள் பழுதடைந்து உள்ளது, சேதமடைந்துள்ளது அனைத்து மின்கம்பங்களையும் மாற்ற வேண்டும், தர்கா தெருவில் மின்சார பற்றாக்குறை ஏற்படுவதால் புதிய மின்மாற்றி ஏற்படுத்தி தர வேண்டும், அதிகமான இளைஞர் வயதில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் எங்கள் ஊரில் உள்ள குடிநீர் பரிசோதனை செய்து இதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்,

அதிகமான இளைஞர்கள் கஞ்சா மது போன்ற போதை பொருட்களுக்கும் சூதாட்டதிற்கும் அடிமையாகி விட்டனர் இதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button