புதுக்கோட்டை மாவட்டத்தில் 489 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்; 11-ந் தேதி நடக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 489 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்; 11-ந் தேதி நடக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 489 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்; 11-ந் தேதி நடக்கிறது.

கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தி தினமான கடந்த 2-ந் தேதியன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 ஊராட்சிகளில் வருகிற 11-ந் தேதி கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

Click here to Download

இக்கூட்டத்தில் கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராம சபை ஒப்பதல் பெறுதல், சாதிப் பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள் மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை

மேலும் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் மற்றும் இதரப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிக அளவில் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டத்தை சிறப்பிக்குமாறு கலெக்டர் அருணா வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button