காரணியானேந்தல்:கொடுரமாக கொல்லப்பட்டவரின் மகள் நிரந்தர அரசு பணி கோரி மனு
காரணியானேந்தல்:கொடுரமாக கொல்லப்பட்டவரின் மகள் நிரந்தர அரசு பணி கோரி மனு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா தொண்டைமானேந்தல் ஊராட்சி காரணியாநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பர்வின்பானு என்ற பெண்மணி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
கொலை செய்யப்பட்ட பர்வீன் பானுவுக்கு திருமணமாகாத இரண்டு பட்டதாரி மகள்கள் உள்ளனர். பர்வீன் பானு இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் சி.வீ. மெய்யநாதன் மையநாதன் அவர்கள் மூத்த மகள் தீனுஷா பானுவுக்கு நிரந்தர அரசு பணி வழங்கப்படும் எனவும், இடம் இருக்கும் பட்சத்தில் வீடு கட்டி தரப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். அதன் அடிப்படையில் தீனுஷா பானு அரசு நிரந்தர பணிக்கோரி அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகம் சென்றார்.
மனுவை பெற்றுக் கொண்ட அறந்தாங்கி வட்டாட்சியர் கருப்பையா அவர்கள் உரிய ஆவணம் செய்யப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து தாய் பர்வீன் பானு கொலை செய்யப்பட்ட வழக்கு குறித்தும் தன் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சரவணக்குமார் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
அவர் தன் மனுவில் காரணியானேந்தல் கிராமத்தில் வசித்து வந்த என் தாயார் பர்வின் பானு ஜூலை 15ம் அன்று கொலை செய்யப்பட்டு இறந்தார். அதனை தொடர்ந்து காரணியானேந்தல் பஞ்சாயத்து மற்றும் ஜமாஅத்தார்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மாண்புமிகு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்போர் நலத்துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் அவர்கள் ஜ.தீனுஷாபானு ஆகிய எனக்கு கிராம உதவியாளர் (தலையாரி) நிரந்தர பணி கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.
எனவே ஐயா அவர்கள் எனது வாழ்வாதாரத்திற்கு மேற்கண்ட கிராம நிர்வாக உதவியாளர் நிரந்தர பணியை வழங்கிருமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
உடன் இஸ்லாமிய கலாச்சார பேரவை மாநில செயலாளர் முனைவர் முபாரக் அலி, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட அவை தலைவர் அப்துல் ஹமீது, ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாவட்ட தலைவர் ரியாஸ் அகமது, மஜக மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது, ஐகேபி மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, மன்சூர் அலி ஆகியோர் உடனிருந்தனர்.






