GPM மக்கள் மேடை சார்பாக மருத்துவ காப்பீடு அட்டை பதிய சிறப்பு ஏற்பாடு!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் GPM மக்கள் மேடை என்னும் தொண்டு நிறுவனம் ஊர் மற்றும் பொதுமக்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது.
அதேபோன்று முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மருத்துவ காப்பீடு அட்டை இதுவரை எடுக்காதவர்களுக்கு புதிதாக பதிவு செய்வதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:-
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
GPM மக்கள் மேடையின் சார்பாக நமது ஊரிலுள்ள அனைத்து மக்களுக்கும் முதல் அமைச்சரின் காப்பீடு திட்டத்தின் மருத்துவ காப்பீடு அட்டை எடுத்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை ஏற்கனவே செய்துவந்த நிலையில் மீண்டும் துரிதபடுத்தி இந்த மாதத்திற்குள் நமது ஊரிலுள்ள அனைத்து மக்களும் பயன் பெறும் நன்நோக்கத்தில் நாளை 12-10-2024 முதல் GPM பொது நல சேவை மையம் நடத்தி வரும் முகம்மது யூசுப் மற்றும் ஹாஷியா இ-சேவை மையம் நடத்திவரும் அப்துல் ரசாக் ஆகிய இரண்டு இடங்களில் இதற்கான சேவை துவங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதல் அமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தின் அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு GPM மக்கள் மேடை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
தேவையான ஆவணங்கள்:
1) ஆதார் அட்டை
2) குடும்ப அட்டை
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.