படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது வீட்டிற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய த.மு.மு.க மாநில நிர்வாகிகள்.
மீமிசல்,ஏப்ரல்.27-
மீமிசல் அருகே கோபாலப்பட்டினத்தில் கொலை செய்யப்பட்ட நைனா முகமது வீட்டிற்கு சென்று த.மு.மு.க மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா மற்றும் த.மு.மு.க தலைமை பிரதிநிதி மண்டல ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு பிறகு மீமிசல் காவல் நிலையம் சென்று கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளரிடம் குற்றவாளிகள் கைது நடவடிக்கை குறித்து விளக்கங்களை கேட்டறிந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலபட்டினத்தை சேர்ந்த நைனாமுகமது என்பவர் கடந்த 22.04.24 திங்கட்கிழமை அன்று மீமிசலில் உள்ள தனது கடையினை அடைத்துவிட்டு இரவு 11.30 மணியளவில் தனது வீட்டிற்கு செல்லும் போது கோபாலபட்டினம் பிராதான சலையான ஸ்டேட் பேங் சாலையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
கொலைசெய்யபட்டுள்ள நைனா முகமது குடும்பத்தினற்கு ஆறுதல் கூறுவதற்காக வருகை தந்த தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக் மற்றும் தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறினார்கள். பின்னர் மீமிசல் காவல் நிலையம் சென்று இந்த கொலைவழக்கு சம்மந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் சேக் தாவூதீன், மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது, மாநில செயற்குழு உறுப்பினர் நவாஸ்கான், மாவட்ட துணை நிர்வாகிகள் MSK.முகமது சாலிகு, அஜ்மல் கான் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.