கோபாலப்பட்டினம் சுன்னத்வல் ஜமாஅத் சார்பில் நாளை பெருநாள் தொழுகை: இடங்கள் மற்றும் நேர விபரங்கள் அறிவிப்பு!

Eid-ul-Fitr Prayer Schedule by Gopalapattinam Sunnathwal Jamath – GPM Thalaimurai Media
கோபாலப்பட்டினம் சுன்னத்வல் ஜமாஅத் சார்பில் நாளை பெருநாள் தொழுகை: இடங்கள் மற்றும் நேர விபரங்கள் அறிவிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் சுன்னத்வல் ஜமாஅத் அறக்கட்டளை சார்பில், நாளை (21.03.2026) சனிக்கிழமை ஈகைத் திருநாள் பெருநாள் தொழுகை நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் தொழுகை நடைபெறும் இடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜமாஅத் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாகத் தொழுகை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்கள் பின்வருமாறு:
பெண்களுக்கான தொழுகை இடங்கள் (காலை 7:00 மணி):
பெண்களுக்குத் தனித்தனியாக நான்கு இடங்களில் காலை 7:00 மணிக்குத் தொழுகை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- அவுலியா நகர் பள்ளிவாசல்
- கடற்கரை பள்ளிவாசல்
- ரஹ்மானியா நூருல் அய்ன் பெண்கள் மதரஸா
- காட்டுக்குளம் பள்ளிவாசல்
ஆண்களுக்கான தொழுகை இடம் (காலை 8:00 மணி):
- பெரிய பள்ளிவாசல்
நிர்வாகத்தின் முக்கிய குறிப்பு:
பெருநாள் தொழுகையானது அறிவிக்கப்பட்டுள்ள மேற்கண்ட நேரங்களில் எவ்விதத் தாமதமுமின்றிச் சரியாகத் நடைபெறும் என ஜமாஅத் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சரியான நேரத்திற்கு வருகை தந்து தொழுகையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





