மணமேல்குடி முதல் அரசநகரி வரை நாளை பிப்ரவரி 6 மின்தடை அறிவிப்பு!

Power Shutdown in Aranthangi Areas March 6 GPM Thalaimurai Media
மணமேல்குடி முதல் அரசநகரி வரை நாளை பிப்ரவரி 6 மின்தடை அறிவிப்பு!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அறந்தாங்கி கிராமிய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
அறந்தாங்கி கிராமிய உட்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 110/33-11 KV கொடிக்குளம் துணை மின்நிலையத்தில், கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கும் பணிகள் நாளை நடைபெற உள்ளது.
இதன் காரணமாக, இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (06.03.2026) வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
அம்மாபட்டினம், விச்சூர், மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், பாலக்குடி, மீமிசல், அரசநகரிப்பட்டினம், கொடிக்குளம், கரகத்திக்கோட்டை, அம்பலவானேந்தல், பாக்கம், முவனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
இந்த மின்நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர்கள் ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு, மின்வாரியத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இந்த மின்தடை அறிவிப்பு தவிர்க்க முடியாத பட்சத்தில் கடைசி நேர மாற்றத்திற்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





