அறந்தாங்கி செலக்சன் பள்ளியில் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி.
அறந்தாங்கி,ஏப்.8-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் இயங்கி வரும் செலக்சன் கல்வி குழும நிறுவனர் கண்ணய்யா தலைமையில் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
செலக்சன் கல்வி குழுமத்தின் தாளாளர் சுரேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார். அறந்தாங்கி பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சேக் அப்துல்லா மற்றும் ஜமாத் நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
அறந்தாங்கியில் செயல்பட்டு வரும் ரோட்டரி சங்கங்களின், வணிகர் சங்க, வர்த்தக சங்க, இந்திய மருத்துவ கழக, கராத்தே பிரதர்ஸ் சமூக சேவை அமைப்பு, திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பு, அக்னி சிறகுகள் சேவை அமைப்பு மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் என மும்மதத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துகொண்ட இந்த இஃப்தார் விருந்தில் இஸ்லாமியர்களின் நோன்பின் மாண்புகளை வாழ்த்தி பேசினார்கள்.
இறுதியாக இஸ்லாமிய போதகர் நோன்பு திறக்கும் வசனங்களை முன்மொழிய அனைவரும் வழி மொழிந்து பேரிச்சை பழம், நோன்பு கஞ்சி, தண்ணீர், பழச்சாறு, இரவு உணவு என உண்டு மகிழ்ந்தனர்.