விளானூரில் தேர்தலை புறக்கணித்து பதாகை வைத்த கிராம மக்கள்.
ஆவுடையார்கோவில், ஏப்.7-
ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட விளானூர் கிராமத்தில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை அதிகாரியிடம் புகார் மனு கொடுத்தனர். ஆனால் இதுநாள் வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரியும், குடிநீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 1 மணி நேரம் மட்டுமே வருகிறது.
தற்போது வெயில் காலம் என்பதால் தண்ணீர் பற்றாக்குறையாலும் அவதிப்படுகின்றனர். அதேபோல் குறைந்த அளவு மின்சாரம் மட்டும் வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் விளானூர் அண்ணா நகர் பகுதியில் சுமார் 4 தலைமுறைகளாக 35 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எனவே எங்களுக்கு பட்டா வழங்க கோரி பல அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் எந்த கட்சிக்கும் வாக்களிப்பது இல்லை என்று தேர்தலை புறக்கணித்து பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.