கோபாலப்பட்டினம் அரசுப் பள்ளி புதிய சாலை கட்டுமானப் பணிகள் மும்முரம்.

கோபாலப்பட்டினம் அரசுப் பள்ளி புதிய சாலை கட்டுமானப் பணிகள் மும்முரம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா, கோபாலப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நீண்ட கால கோரிக்கையான சாலை வசதி தற்போது நனவாகத் தொடங்கியுள்ளது.
கடந்த காலங்களில் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக இருந்த பாதையைச் சீரமைக்கக் கோரி இப்பள்ளி மாணவிகள் முன்னெடுத்த வீடியோ போராட்டம், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து அறந்தை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி ராமச்சந்திரன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில், தற்போது நிரந்தர சாலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் (Road Construction Work) விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு, மாணவிகளின் ஒரு போராட்ட வீடியோ, மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரின் முயற்சி இன்று பள்ளியின் உட்கட்டமைப்பில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
இப்பணிகள் விரைவில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





