ஆவுடையார்கோவில் அமரடக்கி வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு மட்டும் ஜனவரி.31 மின்தடை அறிவிப்பு.

ஆவுடையார்கோவில் அமரடக்கி வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு மட்டும் ஜனவரி.31 மின்தடை அறிவிப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில், அமரடக்கி, மற்றும் வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 31.01.26 சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு மட்டும் நாளை 31.01.26 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறந்தாங்கி மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மற்றபடி கொடிக்குளம் மற்றும் நாகுடி துணை மின்நிலையங்களுக்கு மின்தடை இல்லை. எனவே மணமேல்குடியிலிருந்து கோட்டைப்பட்டினம், மீமிசல் மற்றும் பொன்னமங்கலம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கு வழக்கம்போல் மின்சார விநியோகம் செய்யப்படும்.
குறிப்பு:
மேற்கண்ட அறிவிப்பு தவிர்க்க முடியாத பட்சத்தில் கடைசி நேரம் மாறுதலுக்கு உட்பட்டது.





