மணமேல்குடி அருகே நாட்டுப்படகில் டீசல் தீர்ந்து போனதால் நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு.

மணமேல்குடி அருகே நாட்டுப்படகில் டீசல் தீர்ந்து போனதால் நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு.

மணமேல்குடி அருகே நாட்டுப்படகில் டீசல் தீர்ந்து போனதால் நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு.

மணமேல்குடி அருகே நாட்டுப்படகில் டீசல் தீர்ந்து போனதால் நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 40). இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், இவரும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (30), விநாயகம் (30) மணி (35) ஆகிய 4 பேரும் கடந்த 9-ந் தேதி மதியம் 3 மணியளவில் பொன்னகரம் நாட்டுப்படகு மீன்பிடி தளத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்நிலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை கரைக்கு திரும்ப தொடங்கினர். இதில் மூர்த்தி படகில் சென்ற 4 பேரும் படகுடன் நேற்று முன்தினம் மாலை வரையும் கரைக்கு திரும்பவில்லை.

மீனவர்கள் மாயம்

இதனால் அதிர்ச்சியடைந்த மீனவ குடும்பத்தினர் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசாரும், சக மீனவர்களும் படகின் மூலம் கடலுக்கு சென்று மாயமான மீனவர்களை தேடினர். ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதால் மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் தேடுதல் பணியை நிறுத்தி விட்டு போலீசார் மற்றும் சக மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.

மீன்வளத்துறையினர் கடலில் காற்றின் வேகம் காரணமாக நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என கூறியும்,

மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

4 பேர் மீட்பு

இந்நிலையில் நேற்று அதிகாலை மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் சக மீனவர்கள் விசைப்படகில் சென்று கடலில் தேடினர்.

அப்போது கடலில் சுமார் 7 நாட்டிகல் மைல் தொலைவில் நாட்டுப்படகு டீசல் இல்லமால் நின்றுள்ளது. இதனால் மீனவர்கள் இரவு முழுவதும் படகில் தத்தளித்துள்ளனர். மேலும் தங்களை யாராவது காப்பாற்ற வருவார்களா? என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இதையடுத்து 4 மீனவர்களுடன், படகையும் மீட்ட போலீசார் கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மீனவர்கள் 4 பேரையும் சிகிச்சைக்கு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து கடலோ ரபாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button