அம்மாப்பட்டினம் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

அம்மாப்பட்டினம் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

புதுக்கோட்டை மாவட்டம் அம்மப்பட்டினம் அருகே ஆலிமுசாவயலைச் சேர்ந்த சுமன் (வயது 22) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நேரத்தில் பந்தை பாய்ந்து பிடிக்க முயன்ற அவர் தவறுதலாக தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பியைத் தொட்டுள்ளார்.

மின்கம்பியை தொட்டவுடன் உடல் முழுவதும் மின்சாரம் பாய, கடுமையாக தாக்கிய மின்சார வேகத்தால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த திடீர் சம்பவம் அங்கிருந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணமேல்குடி போலீசார் சுமன் என்பவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞரின் திடீர் மரணத்தால் அந்த பகுதியில் துக்கச்சூழல் நிலவுகிறது. மின்கம்பிகள் பாதுகாப்பாக அமைக்கப்படுதல் அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இத்தகைய விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை மறியல்

மின்சார ஊழியர்களின் அலட்சியபோக்கே இந்த உயிரிழப்பிற்கு காரணம் என கூறி , சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த இளைஞருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மணமேல்குடியில் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எம்.எல்.ஏ இரங்கல்

சம்பவம் பற்றி அறிந்து கொண்ட அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டு, உறவினர்களுக்கு ஆறுதலையும் கூறிக்கொண்டு, உரிய நிவாரணம் கிடைக்க முதல் அமைச்சருக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button