கோட்டைப்பட்டினத்தில் மீனவர் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்.

கோட்டைப்பட்டினத்தில் மீனவர் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்.

கோட்டைப்பட்டினத்தில் மீனவர் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்.

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவர் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜேந்திரன் திடிரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் உறவினர்கள் கோட்டைப்பட்டினம் பகுதிக்கு வந்தனர். இதையடுத்து இறந்தவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு போவதற்கான குடும்ப சூழ்நிலை இல்லை.

இதனால் குடும்பத்தார்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கோட்டைப்பட்டினம் பகுதியில் இறந்த மீனவர் உடலை இஸ்லாமியர்கள் முன்னின்று இந்து முறைப்படி அடக்கம் செய்தனர். அடக்கம் செய்த இஸ்லாமியர்களுக்கு அந்த குடும்பத்தினர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவம் மனிதநேயத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கான எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button