புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 17-ந் தேதி நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 17-ந் தேதி நடைபெறுகிறது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 17-ந் தேதி புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், வேலைநாடும் இளைஞர்கள் தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்துக்கொள்ளுமாறு கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் :
இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலைதேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தனியார்துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்யலாம். அதேபோல 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெறலாம்.
முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் புகைப்படத்துடன் வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொள்ளலாம்.
மேலும் முகாமில் பங்கேற்கும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் தமிழக அரசின் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.





