மீமிசலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று நடைபெறுகின்றது.

மீமிசலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று நடைபெறுகின்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று 06.08.25 (புதன்கிழமை) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆவுடையார்கோவில்- 4 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு மீமிசல் பேரிடர் மேலாண்மை கட்டிடத்தில் நடைபெறுகின்றது.
மேலும் அறந்தாங்கி நகராட்சியில் 12, 18 மற்றும் 19-வது வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு அறந்தாங்கி நூர் திருமண மஹாலிலும், கீரமங்கலம் பேரூராட்சி பகுதி பொதுமக்களுக்கு மாரியம்மன் கோவில் மண்டபத்திலும், கந்தர்வகோட்டை- 3 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு கல்லாக்கோட்டையில் ஒரு திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளது.
இதேபோல மணமேல்குடி- 3 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு கீழமஞ்சக்குடியில் திருமண மண்டபத்திலும், கறம்பக்குடி- 3 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்திலும், ஆவுடையார்கோவில்- 4 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு மீமிசல் பேரிடர் மேலாண்மை கட்டிடத்திலும் நடைபெற உள்ளது.
மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.





