தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடக்கு அம்மாப்பட்டினம் கிளை சார்பாக இரத்ததான முகாம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடக்கு அம்மாப்பட்டினம் கிளை சார்பாக இரத்ததான முகாம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), புதுக்கோட்டை மாவட்டம், வடக்கு அம்மாப்பட்டினம் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து, இரத்ததானம் முகாம், 04.05.2025 ஞாயிற்றுக்கிழமையன்று, மணமேல்குடி அரசு மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இதற்கு, மாவட்டத் தலைவர், H.சித்திக் ரகுமான்.,B.E., அவர்கள் தலைமை வகித்தார்கள்.
இதில் மாவட்டத் துணைச் செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், மாவட்டத் துணைச் செயலாளர் அறந்தை ஷேக் அப்துல்லாஹ், மாவட்ட மாணவணி அணிச் செயலாளர் ரகுமத்துல்லா, கிளை தலைவர் அமீர் அப்பாஸ், துனை செயலாளர் ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் S.காயத்ரி அவர்கள் மற்றும் ரா.பன்னீர் செல்வம் ( வட்டாட்சியர் மணமேல்குடி),
மற்றும் Dr.ஜூனைத் கான் (அரசு மருத்துவர் மணமேல்குடி) ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந்த முகாமின் துவக்க உரையாக, மாவட்டத் தலைவர், H.சித்திக் ரகுமான்.,B.E., அவர்கள், “ஒரு மனிதரை வாழ வைத்தவர் அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவரைப் போன்றவர் ஆவார்” என்ற குர்ஆனின் போதனையின் அடிப்படையிலும், இஸ்லாம் என்பது பிறர் நலன் நாடக்கூடியது என்ற நபிகள் நாயகம் நற்போதனைகள் அடிப்படையிலும் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பேசினார்கள்.
இந்த முகாமில் ஆர்வத்துடன் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். மருத்துவ தகுதி அடிப்படையில், 22 யூனிட்கள் இரத்தம் கொடையாக பெறப்பட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
இரத்தம் வழங்கிய அனைவருக்கும், அறந்தாங்கி அரசு மருத்துவமனை மருத்துவர். இராதாகிருஷ்ணன் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
இறுதியாக மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சபியுல்லா அவர்கள் நன்றியுறை நிகழ்த்தினார்கள்.
மேலும் இம்முகாமில் பங்களிப்பு செய்த, இரத்த வங்கி மேலாளர் மற்றும் அவரது குழுவிற்கும், மேலும் இரத்தம் கொடையளித்த, கலந்து கொண்ட பொதுமக்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்த கிளை நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு நன்றியினைத் தெரிவித்தார்கள்.





