பொதுவினியோக திட்ட குறைதீர் கூட்டம்; நாளை நடக்கிறது

புதுக்கோட்டை, மார்ச் 7 –
பொதுவினியோக திட்ட குறைதீர் கூட்டம்; நாளை நடக்கிறது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும், ஒவ்வொரு மாதமும் பொதுவினியோகத் திட்டத்திற்கான குறைபாடுகளை களைவதற்காக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, தாலுகா அலுவலகங்களில், தனி தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் பொதுவினியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில், பொதுமக்கள் மற்றும் குடும்ப அட்டையினருக்கான சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பதிவு செய்யப்படும்.
இந்த கூட்டத்தில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்க்கை, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை மற்றும் செல் போன் எண் பதிவு மாற்றம் ஆகிய சேவைகள் கோரப்பட முடியும்.
மேலும், பொதுமக்கள் மற்றும் குடும்ப அட்டையினர்கள், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், குடும்ப அட்டைகளில் உள்ள இடர்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் தொடர்பான புகார்களை, பாதுகாப்பு சட்டம் 2019 இன் படி தெரிவித்து பயன் பெறலாம்.
இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ளார்.