ஜெட் விமானம் போடும் கோடுகள் பற்றி தெரியுமா?

ஜெட் விமானம் போடும் கோடுகள் பற்றி தெரியுமா?
வானத்தில் கோடு கோடாக போட்டுக் கொண்டு விமானம் செல்வதை பார்த்திருப்பீர்கள். அது தான் ஜெட் விமானம்.
இது காலை நேரத்தில் வானில் செல்லும் போது பார்த்தால் கோடுகள் எல்லாம் தெளிவாக தெரியும். நாம் அதை புகை என்று நினைத்து இருப்போம். ஆனால் அது வெறும் புகை அல்ல. அதில் கார்பன்டை ஆக்சைடும் பிற துகள்களும் அதிகமாக இருக்கிறது.
விமானம் உயரத்தில் பறக்கும்போது அங்கே வெப்ப நிலை குறைவாக இருக்கும். அதனால் கார்பன்டை ஆக்சைடு குளிர்ந்து பனிக்கட்டியாகி விடுகிறது. இதைத் தான் உலர் பனிக்கட்டி என்று கூறுவர். இதோடு துகள்கள் மீது நீராவியும் படிந்து பனிக்கட்டியாக மாறுகிறது. இது தான் வெண்மேகம் போன்று வானில் திரண்டு காட்சி அளிக்கிறது.
ஜெட் விமானம் விடுகிற புகையின் பாதையில் இந்த உறைதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனால் தான் நமக்கு வானத்தில் நீளமான கோடு போட்டது போல தெரிகிறது.