புதுக்கோட்டையில் முதல்வர் மருந்தகம் செயல்படும் இடங்கள்.

புதுக்கோட்டை., பிப்.25:
புதுக்கோட்டையில் முதல்வர் மருந்தகம் செயல்படும் இடங்கள்.
தமிழகம் முழுவதும் நேற்று 1,000 முதல்வர் மருந்தகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட 16 முதல்வர் மருந்தகம் செயல்படும் இடங்கள் பற்றி விவரம் வருமாறு:-
1.அரசுமருத்துவமனை அருகே புதுக்கோட்டை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை கந்தர்வகோட்டை,
2.கறம்பக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், புதுக்கோட்டை சாலை, கறம்பக்குடி,
3.காமராஜர் நகர், விராலிமலை.
4.தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, கடைவீதி, கீரனூர்.
5.தேக்காட்டூர்,
6.தண்டலை ரோடு, மணமேல்குடி.
7.அறந்தாங்கி.
8. நவாப் பள்ளிவாசல் எதிரே அன்னவாசல்.
9. ஆலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வடகாடு முக்கம், ஆலங்குடி.
10.கோட்டைப்பட்டினம்.
11.பொன் புதுப்பட்டி தெற்கு ரதவீதி, பொன்னமராவதி.
12.மாஞ்சான்விடுதி சாலை, வம்பன்.
13.மேலராஜவீதி, தண்டாயுதபாணி சாமி கோவில் அருகே புதுக்கோட்டை.
14.யூனியன் அலுவலகம் எதிரே குன்றாண்டார்கோவில்.
15.மேட்டுத்தெரு, அன்னவாசல்.
16.நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, சோதனைச்சாவடி, விராலிமலை.