மணமேல்குடி ஒன்றியத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான “இணைவோம் மகிழ்வோம்” நிகழ்வு நடைபெற்றது.
மணமேல்குடி, மார்ச்.28-
இந்நிகழ்வில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய இந்திராணி தலைமையில் தொடங்கியது.
மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீனவர்க் காலனி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மணமேல்குடி ஒன்றியத்தில் கோட்டைப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை சக மாணவர்களோடு இணைத்து இணைவோம் மகிழ்வோம் என்ற நிகழ்வு கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் மாற்று திறன் கொண்ட மாணவர்களே சக மாணவர்களோடு இணைத்து பலூன் உடைத்தல் பாகங்களை பொருத்துதல் சிறு சிறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
அதன் நிகழ்வாக இன்று இப்போட்டையில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசு மற்றும் தேநீர் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர் திருமதி அங்கையற்கன்னி இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் ஆசிரியர் பிராபாகரன் இயன்முறை மருத்துவர் செல்வகுமார் சிறப்பாசிரியர்கள் மணிமேகலை கோவிந்தன் நதியா மற்றும் பெற்றோர்கள் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.