மணமேல்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
மணமேல்குடி, டிச.15-
மணமேல்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
மணமேல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கன மழையால் வயல்வெளிகளில் மழைநீர் புகுந்தது. இதனால் நெல், கத்தரி, பச்சை மிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறி பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட மணமேல்குடி, கிருஷ்ணாஜிபட்டிணம், கோலேந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மாவட்ட கலெக்டர் அருணா மற்றும் மணமேல்குடி ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
அப்போது, தாசில்தார் பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அரசமணி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சேக் அப்துல்லா மற்றும் அனைத்து கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடன் இருந்தனர்