போலீஸ் பணிக்கான தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 62 பேர் தேர்ச்சி
புதுக்கோட்டை,. ந.வ 29
2023-ஆம் ஆண்டில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறைகளில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான 3,359 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வுகள் நடைபெற்றன.
இந்த தேர்வுகளில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 62 பேர் வெற்றி பெற்றனர். வெற்றியாளர்கள் வருகிற 4-ஆம் தேதி தொடங்கி பயிற்சியை ஆரம்பிக்க உள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 62 பேருக்கும் பணி நியமன ஆணைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வழங்கி, அவர்களை பாராட்டினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1