பெண்களுக்கான உணர் திறன் பயிற்சி
ஆவுடையார்கோவில், நவ.25-
ஆவுடையார்கோவிலில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 2024-25-ம் ஆண்டு பெண்களுக்கான சமுதாய வளப்பயிற்று பயிற்சிக்கான ஒருநாள் உணர் திறன் பயிற்சி ஆவுடையார்கோவிலில் நடைபெற்றது.
பயிற்சியில் பண்ணை மற்றும் பண்ணை சாரா செயல்பாடுகள் பற்றி கருப்பையா பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் சமூக வலை பயிற்சி வலை பயிற்றுனர்களின் பணிகள், ஒருங்கிணைந்த பண்ணையம், இயற்கை வேளாண்மை, சான்று விதை உற்பத்தி, அசோலா வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, அஜீவிகா அறிமுகம், தென்னை நர்சரி உள்ளிட்ட 10 வகையான பிரிவுகளில் பயிற்சி விரிவாக பயிற்றுவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆவுடையார்கோவில் ஒன்றியம் 35 ஊராட்சிகளில் இருந்து 50 பெண்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார இயக்க மேலாளர் ஜெயந்தி, ஆனந்தி ஆகியோர் செய்திருந்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1