வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்.
ஆவுடையார்கோவில், மார்ச்.25-
ஆவுடையார்ேகாவில் தாலுகாவில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் தலைமை தாங்கினார். தொடர்ந்து வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு செய்யும் வண்ணம் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒற்றைச் சிலம்பம், இரட்டை சிலம்பம், வாள் வீச்சு, கத்திசண்டை, சுருள் வீச்சு, மான்கொம்பு ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் கராத்தே மாணவர்கள் 30 பேர் பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து காட்டினர். இதில் தேர்தல் துணை தாசில்தார்கள் சர்க்கரை பாண்டியன், சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ஜெயந்தி விஜயா, போத்திராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1