கோபாலப்பட்டினம் மக்களுக்கு நன்றி தெரிவித்த கே.நவாஸ் கனி எம்.பி!
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற செய்த கோபாலப்பட்டினம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான கே.நவாஸ் கனி எம்.பி கோபாலபட்டினத்திற்கு வருகை புரிந்தார்.
நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கே.நவாஸ் கனி எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேட்சியை என்று மொத்தம் 25 வேட்பாளர்கள் இராமநாதபுரம் தொகுதியில் களமிறங்கினர்.
இந்திய கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட கே.நவாஸ் கனி சுமார் 5,09,664 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
நன்றி தெரிவித்தார்
நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தமைக்காக தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கே.நவாஸ் கனி எம்.பி ஒவ்வொரு ஊருக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
அதன்படி இன்று 05.10.24 சனிக்கிழமை கோபாலப்பட்டினம் ஜூம்மா பெரிய பள்ளிவாசலுக்கு வருகை புரிந்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் மற்றும் திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
பிறகு கே.நவாஸ் கனி எம்.பி ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
இந்நிகழ்வில் கோபாலப்பட்டினம் ஜமாத் நிர்வாகிகள், மேல்சபை உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.