அழகப்பா பல்கலைக்கழக கடலியல், கடலோரவியல் துறை சார்பில் தொண்டி கடற்கரையில் தூய்மை பணி; 150 கிலோ குப்பைகள் அகற்றம்.

தொண்டி, செப்.22-

அழகப்பா பல்கலைக்கழக கடலியல், கடலோரவியல் துறை சார்பில் தொண்டி கடற்கரையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 150 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டது.

தூய்மைப் பணி

தொண்டியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கடலியல் மற்றும் கடலோரவியல் துறை சார்பில் உலக கடற்கரை தூய்மை தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் செந்தில் ராஜன் தலைமை தாங்கினார். கடலியல் துறை தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராஜாராம் கலந்து கொண்டு கடற்கரை தூய்மை பணியை தொடங்கி வைத்து பேசினார்.

திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி, தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான், தொண்டி வானிலை ஆராய்ச்சி நிலைய அலுவலர் சங்கல்ப் அகர்வால், தொண்டி கடற்கரை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், கடலியல் துறை இணைபேராசிரியர் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழக கடலியல் துறை மற்றும் மகளிர் கல்லூரியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொண்டி கடற்கரையில் உள்ள கடலியல் துறை வளாகத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள புனித சிந்தாத்திரை அன்னை ஆலய கடற்கரை வரை தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

இதில் சுமார் 150 கிலோ குப்பைகளை சேகரித்தனர். இதில் சுமார் 58 கிலோ பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகளைபேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

விழிப்புணர்வு பேரணி

அதனைத் தொடர்ந்து கடற்கரை தூய்மை விழிப்புணர்வு பேரணி தொண்டி பஸ் நிலையம் முன்பு தொடங்கியது. பேரணியை பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி கடலியல் துறை வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் கல்லூரி பேராசிரியர்கள், மரைன் போலீசார், மீனவர்கள், பொதுமக்கள், பணியாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கடலியல் துறை இணை பேராசிரியர் பரமசிவம் நன்றி கூறினார்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button