என்ஜினீயரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்வு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு.
சென்னை, ஆக.25-
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டணம் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
பட்டப்படிப்பு சான்றிதழ்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 430-க்கும் அதிகமான என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இந்த கல்லூரிகளில், கிட்டத்தட்ட 4 லட்சத் துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இளநிலை, முதுநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக்கான கட்டணத்தை 50 சதவீதம் வரை உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், தன்னாட்சி பெற்ற என்ஜினீயரிங் கல்லூரியில் இளநிலை, முதுநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான பட்டப்படிப்பு சான்றிதழ் கட்டணம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணம் இந்த கல்வியாண்டு முதல் ரூ.1,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை டிஜி லாக்கரில் பதிவேற்றம் செய்ய ரூ.1,500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வு
மேலும், தன்னாட்சி பெறாத என்ஜினீயரிங் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கட்டணம், ஆய்வறிக்கை கட்டணம் ஆகியவையும் உயர்த்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், இளநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு, செய்முறை தேர்வு கட்டணம், செயல்முறை பயிற்சி தாள் ஒன்றுக்கு ரூ.150-ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இளநிலை மாணவர்களின் ஆய்வறிக்கை கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இளநிலை செய்முறை பயிற்சிக்கான கட்டணம் ரூ.450 முதல் ரூ.675 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதுநிலை செமஸ்டர் தேர்வு, செய்முறை தேர்வு, செயல்முறை பயிற்சி, செய்முறை பயிற்சி, கோடைகால திட்டம் ஆகியவற்றுக்கான கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.450-ல் இருந்து 675 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணம் இந்த கல்வியாண்டு முதல் ரூ.1,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை டிஜிலாக்கரில் பதி வேற்றம் செய்ய ரூ.1,500 கட்டணம் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் நிர்ணயம் முறை 2024-25-ம் கல்வியாண்டு, நவம்பர்/டிசம்பர் மாத செமஸ் டர் தேர்வு முதல் நடைமுறைக்கு வருவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த கட்டண முறையை ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் வரையில் உயர்த்தவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள் ளது.