ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவு 3 மணி நேரம் குறைப்பு.
பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்கும் நேரம் ஆகஸ்ட் 19 முதல் போராட்டம் முடியும் வரை 3 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கும் வெளிப்புற சிகிச்சை பிரிவு காலை 10 மணி வரை மட்டுமே இயங்கும்.
அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.
உயிர்காக்கும் பராமரிப்பு தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1