100 சதவீத தேர்ச்சியைப் பாராட்டி மீமிசல் மெட்ரிக் பள்ளிகளுக்கு விருது.
மீமிசல், ஆக.7-
புதுக்கோட்டைமாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி என இரண்டு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் நடந்த 10, 11 மற்றும் 12-ம் வகுப்புப் பொது தேர்வுகளில் இரண்டு பள்ளி மாணவர்களும் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து சென்னையில் கல்வித்துறை சார்பில் பொதுத்தேர்வுகளில் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
நடைபெற்ற இவ்விழாவில் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் வாசிம் கான் மற்றும் நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் நிரஞ்சன் ஆகிய இருவருக்கும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் மற்றும் விருது வழங்கினர்.
இந்த தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
புகைப்படம்
நியூ சங்கீத்
பாப்புலர்