வௌிநாடு வாழ் தமிழர்களுக்கு நலவாரிய அட்டைகள் வினியோகம்.
புதுக்கோட்டை, ஆக.3-
தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில், இணை மானிய நிதி மாவட்ட அளவிலான தேர்வுக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். கூட்டத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் 22 பேருக்கு நலவாரிய அட்டைகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு 30 சதவீதம் மானியத்துடன் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இக்கடனுதவியினை தொழில் முனைவோர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு தொழில் தொடங்கி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திட கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் செல்வம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் நந்தக்குமார், பொதுமேலாளர் (மாவட்ட தொழில் மையம்) திரிபுர சுந்தரி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.