பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி; ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு.
ஆவுடையார்கோவில், ஜூலை.22-
ஆவுடையார்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் திருப்பெருந்துறை ஊராட்சி சார்பில் பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் சந்திரா ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். இதையடுத்து திருப்பெருந்துறை ஊராட்சி பொதுமக்களிடம் இருந்து எஸ்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மனுக்களை பெற்று அதிகாரிகளிடம் கொடுத்து உடனடி தீர்வு மேற்கொண்டார்.
மேலும் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிக்கு வீடு கட்டும் அனுமதியை வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாகரன், வீரையா, மாவட்ட கவுன்சிலர்கள் கே.கே.சி.ராமநாதன், சுப்பிரமணியன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1