தமிழகத்தில் 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு.
தமிழ்நாட்டில் 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
0 முதல் 400 கிலோ வாட் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ரூ.4.60-லிருந்து ரூ.4.80 ஆகவும்,
401 முதல் 500 கிலோ வாட் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ரூ. 6.15-லிருந்து ரூ.6.45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் 501 முதல் 600 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹8.15ல் இருந்து ₹8.55 ஆக உயர்வு.
601 முதல் 800 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹9.20ல் இருந்து ₹9.65 ஆக உயர்வு.
801 முதல் 1000 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹10.20ல் இருந்து ₹10.70 ஆக உயர்வு.
1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இனி ₹11.80 வசூலிக்கப்படும்.
இந்த மின்கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதால் அன்று முதல் புதிய மின் கட்டணத்தில் கணக்கிடப்படும்.