மாணவர்களுக்கு பாராட்டு விழா!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற கோபாலப்பட்டினத்தை சேர்ந்த இப்ராஹிம் என்ற மாணவனுக்கும் இரண்டாமிடம் பிடித்த அந்தரியேம்பலை சேர்ந்த வீரசக்தி என்ற மாணவிக்கும் தமிழக வெற்றி கழகம் சார்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
அண்மையில் நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டம் மற்றும் கல்வி மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் இன்று (28.06.24) பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் உள்ள பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்று அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சாதிக் பாட்சா அவர்களின் மகன் முகமது இப்ராஹிம் என்ற மாணவருக்கும் மற்றும் இரண்டாமிடம் பெற்ற அந்தரியேம்பலை சேர்ந்த மதி அவர்களின் மகள் வீரசக்தி என்ற மாணவிக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் பொன்னாடை அணிவித்து, சான்றிதழ்கள் மற்றும் ரூ.5000 ஊக்கத்தொகையினை வழங்கி கௌரவித்து பாராட்டினார்.
புகைப்படம்


வீடியோ






