கோழி வளர்ப்பு திட்டம் :- பெண்களுக்கு தலா 40 கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று கால்நடை பராமரிப்புத்துறையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்கள் என, 38 ஆயிரத்து 700 பெண் பயனாளிகளுக்கு தலா 40 நாட்டு ரக கோழிக்குஞ்சுகள் வீதம், 6 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
உயர் மரபுத் திறன் கொண்ட கால்நடைகளை இனப்பெருக்கத்திற்காக வளர்ப்பதற்கும் அதிகபரப்பளவில் பசுந்தீவன பயிர்களை உற்பத்தி செய்வதற்கும்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடை பண்ணை ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து டானிக். கறவை மாடுகளுக்கு வழங்கப்படும்
மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 3000 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.5 கோடி செலவில் வழங்கப்படும்.
கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தீவன உற்பத்திக்கான மேம்படுத்தப்பட்ட உத்திகள் குறித்து கால்நடை மருத்துவர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் ஆகியோருக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் பயிற்சி வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த சுகாதாரத்தின் கீழ் 5 லட்சம் செல்லப்பிராணிகளுக்கு ஒரு கோடியே செலவில் 50 விழுக்காடு மானியத்தில் வெறிநாய் கடி நோய் தடுப்பூசி போடப்படும்.
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு விடுதி கட்டப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.