நீட், நெட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் முறைகேடு செய்தால் ரூ1 கோடி அபராதம், 10 ஆண்டு சிறை புதிய சட்டம் நாடு முழுவதும் அமல்.
நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, பொது தேர்வுகள் – நேர்மையற்ற வழிமுறைகளை தடுத்தல் சட்டத்தை, மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நடைபெறும் பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பொதுத்தேர்வுகளின் நேர்மையற்ற வழிமுறைகளை தடுத்தல் சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டிருந்தது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மற்றும் பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்எஸ்சி) நடத்தப்படும் ஆட்சேர்ப்புத் தேர்வுகள், நீட், ஜேஇஇ, கியூஇடி, நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் மற்றும் திட்டமிடப்பட்ட முறைகேடுகளைத் தடுக்க “பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் மோசடியில் ஈடுபடுபம் தனிநபரோ அல்லது குழுவோ அல்லது தேர்வு நடத்தும் அதிகாரிகளோ, நிறுவனங்கோ இத்தகை குற்றங்களைச் செய்தால் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரையில் சிறை தண்டனை விதிக்கிறது இந்த சட்டம். அத்துடன் ரூ1 கோடிக்கும் குறையாத அபராதம் விதிக்கவும் வகை செய்கிறது இந்த சட்டம்.மேலும் நீட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.
இத்தகைய தேர்வு முறைகளில் ஈடுபடுவோருக்கு ஜாமீன் கிடைக்காது.
யுபிஎஸ்சி, ஸ்டாப் செலக்ஷன் கமிஷன், ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தேசியத் தேர்வு முகமைகள் நடத்தும் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளில் ஈடுபட்டோருக்கு இந்த சட்டத்தின் கீழ் தண்டனை வித்இக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் நீட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.
நாடு முழுவதும் தற்போது பொதுத் தேர்வுகளில் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், அதிரடியாக இந்த சட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.