பிங்க் ஆட்டோ திட்டம்: 200 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் – தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் விதமாகவும் அரசு மானியமாக தலா 1 இலட்சம் விதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு, ‘பிங்க் ஆட்டோ’ஸ் இயக்கம் திட்டம் செயல்படுத்தப்படும்!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாலை நேர நிகழ்வுகள் தொடங்கி உள்ளது. இதில், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை,மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் நலன் துறை உள்ளிட்ட துறைகளில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.இதற்கு துறை அமைச்சர்கள் முத்துசாமி, கீதாஜீவன் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அறிவிப்புகளை அந்த துறையின் அமைச்சர் கீதாஜீவன் வெளியிடப்பட்டு வருகிறார்.அதில், சென்னையில் 200 பெண்களை தேர்வு செய்து, ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கி, பிங்க் ஆட்டோ திட்டம் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 200 பெண்களுக்கு சுய தொழில் செய்ய ஐம்பதாயிரம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என கூறியுள்ளார்