மணமேல்குடி ஒன்றியத்தில் உயர்கல்வி வழிகாட்டி உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி தொடக்கம்.
மணமேல்குடி,மே.09-
மணமேல்குடி ஒன்றியத்தில் உயர்கல்வி வழிகாட்டி உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சியினை மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறந்தாங்கி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் தொடங்கியது.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் மற்றும் பள்ளித் துணை ஆய்வாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்வில் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்வில் கருத்தாளர்களாக முதுகலை ஆசிரியர்கள் வெற்றிச்செல்வன் , சாய் சரன்ராஜ் ஆசிரியர் பயிற்றுனர் முத்துராமன் ஆகியோர் செயல்பட்டனர்
இந்நிகழ்வில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏழு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து உயர்கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் முக்கியமாக புதுமைப்பெண் திட்டம் மாணவிகளின் உயர்கல்விக்கு முக்கிய திட்டமாக உள்ளதால் மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண் குழந்தைகளை 100% உயர்கல்வியில் சேர்க்க வேண்டும் என்றும்,
உயர்கல்வியில் ஒரு மாணவனை சேர்ப்பது என்பது ஆசிரியரின் தார்மீக கடமை என்பதனை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும்,பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், பொருளாதார அடிப்படையில் பள்ளிக்கு செல்ல மறுக்கும் மாணவர்களையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளியில் சேர்க்க வைக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு குடியிருப்புகளிலும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர் கல்வி படிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இப்பயிற்சியில் ஒவ்வொரு அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்தும் தலைமை ஆசிரியர்கள், உயர் கல்வி வழிகாட்டல் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர்கள், பள்ளி மேலாண்மை குழு கல்வி அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் கலந்து கொண்டார்.