கோட்டைப்பட்டினத்தில் மின்சாரம் பாய்ந்து தற்காலிக ஊழியர் பலி: உறவினர்கள் சாலை மறியல்!

கோட்டைப்பட்டினத்தில் மின்சாரம் பாய்ந்து தற்காலிக ஊழியர் பலி: உறவினர்கள் சாலை மறியல்!

Electrician electrocuted to death in Manamelkudi GPM Thalaimurai Media

கோட்டைப்பட்டினத்தில் மின்சாரம் பாய்ந்து தற்காலிக ஊழியர் பலி: உறவினர்கள் சாலை மறியல்!

சம்பவம் குறித்து விபரமாவது:

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் ராம் நகரைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 48). இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று 06.03.26 வெள்ளிகிழமை கொடிக்குளம் பகுதியில் உள்ள மின்மாற்றியில் (Transformer) குமரேசன் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், குமரேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சாலை மறியல் போராட்டம்:

குமரேசனின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு, அவரது உறவினர்கள் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாகச் செல்லும் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை:

தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, போலீசார் குமரேசனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button