தொண்டியை சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வசதி.

இதுதவிர, 8 ஊர்களில் உள்ள தபால்நிலையங்களில் தபால்நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் உள்ளது. இதற்கிடையே, மிகவும் பின்தங்கிய கிராமப்புறங்களில் வசிப்பவர்களும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வசதியாக மொபைல் (நடமாடும்) பாஸ்போர்ட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, மதுரை மண்டலத்தில், வேன் மூலம் நடமாடும் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படுகிறது. இந்த வேன் எந்ததெந்த ஊர்களில் எந்த தேதிகளில் பாஸ்போர்ட் விண்ணப்பம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நடமாடும் சேவை மையம் அமைக்கப்படுகிறது.
இதற்காக புதிய பாஸ்போர்ட் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கும் பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்திய பின்னர், சேவை மைய அலுவலக முகவரியில் Location 2 RPO Mobile Van Thondi TN02CA7837 என்பதை தேர்வு செய்து முன்பதிவு செய்ய வேண்டும்.
முன்பதிவு ரசீதை பதிவிறக்கம் செய்து குறித்த நேரத்தில் உரிய ஆவணங்களுடன் நடமாடும் பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வர வேண்டும் என்று மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார்.




