அழகன்வயல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்21-ந்தேதி நடக்கிறது.

அழகன்வயல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் 21-ந்தேதி நடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா, அழகன்வயல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் வருகிற 21-ந்தேதி காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.
முகாமுக்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்குகிறார். இதையொட்டி பொதுமக்களிடம் இருந்து முன்மனுக்கள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பெறப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





