சர்வதேச செஸ் போட்டிகளில் பதக்கம் வென்ற புதுக்கோட்டை பள்ளி மாணவர் முகமது ஈமான்!

சர்வதேச செஸ் போட்டிகளில் பதக்கம் வென்ற புதுக்கோட்டை பள்ளி மாணவர் முகமது ஈமான்!
புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி மாணவர் முகமது ஈமான் கடந்த 2025 டிசம்பர் 1-ந் தேதி முதல் 2026 ஜனவரி 6-ந் தேதி வரை இத்தாலி, குரோஷியா மற்றும் ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டிகளில் கலந்து கொண்டார்.
இதில் 3 பிரிவுகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் என தொடர்ந்து வெற்றி பெற்று மொத்தமாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பரிசுத்தொகை வென்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவர், கலெக்டர் அருணாைவ சந்தித்து பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, முதன்மை கல்வி அலுவலர் சண்முகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





