புதுக்கோட்டை தபால் கோட்டத்தில் மாணவர்களுக்கான பார்சல் தள்ளுபடி திட்டம்

புதுக்கோட்டை தபால் கோட்டத்தில் மாணவர்களுக்கான பார்சல் தள்ளுபடி திட்டம்
புதுக்கோட்டை கோட்டத்தில் 56 தபால் நிலையங்களில் குறைந்த விலையில் வெளிநாட்டு பார்சல்கள் அனுப்ப சிறப்பு மேளா.
புதுக்கோட்டை தபால் கோட்டத்திற்கு உட்பட்ட 56 தபால் நிலையங்களில் வெளிநாட்டு பார்சல்கள் அனுப்புவதற்காக சிறப்பு மேளா நடைபெற்று வருகிறது.
இதில் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு பிறப்பு, தைப்பொங்கலை முன்னிட்டு வெளிநாட்டு பார்சல்கள் அனுப்புவதற்காக சிறப்பு மேளா கடந்த 15-ந்தேதி தொடங்கியது.
இந்த மேளா அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பயன்படுத்தி மக்கள் வெளிநாடு பார்சல்கள் குறைந்த விலையில் அனுப்பலாம் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவலுக்கு அருகில் இருக்கும் தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.





