மீமிசலில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைப்பெற்றது.

மீமிசலில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று 30.09.25 செவ்வாய்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குனர் தலைமையிலும், மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் முன்னிலையில் அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஆவுடையார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளருமான உதயம் சண்முகம் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசுகையில்,

எந்த நாட்டிலுமே இலவச மருத்துவம் இல்லை. ஆனால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்து அனைத்து நாடுகளும் அவரை பாராட்டுகின்றது என்றார்.
முகாமில் 17 மருத்துவக் குழுக்களால் இலவசமாக மருத்துவம் பார்க்கப்பட்டது. பயனாளிகள் அனைவருக்கும் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ போன்றவை எடுக்கப்பட்டது. மேலும் கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டது.

மீமிசல், கோபாலப்பட்டினம், ஆர்.புதுப்பட்டினம், செய்யானம், அரசநகரி, முத்துக்குடா ஆகிய சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் இந்த முகாமில் பங்குபெற்று பயன் அடைந்தனர்.
இதில் ஆவுடையார்கோவில் தாசில்தார் பாலகிருஷ்ணன், மருத்துவ பணி தொழுநோய் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக வட்டார சுகாதாரத்துறை டாக்டர் அரவிந்த் வரவேற்றார். முடிவில் வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.





