புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு; நாளை முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு; நாளை முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு; நாளை முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது.

ஊா்க்காவல் படை

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை தளவாயாக கொண்டு செயல்படும் ஊர்க்காவல் படையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தன்னார்வலர்கள் ஆண், பெண் இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Click here to Download

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 13-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் வரலாம்.

கல்விச்சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் அலுவலகத்திற்கு வர வேண்டும்.

உடற்தகுதி

தன்னார்வலர்கள் கல்வி தகுதியில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு படித்திருக்க வேண்டும். 20 வயது முதல் 45 வயதிற்குள்ளும், தமிழகத்தில் வசிப்பவராகவும், காவல்துறையினரை போன்று உடற்தகுதிகளை கொண்டிருக்க வேண்டும்.

குற்ற வழக்குகளிலோ, அரசியல் கட்சிகளிலோ சம்பந்தப்பட்டவர்களாக இருக்கக்கூடாது.

தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தாங்கள் தற்போது ஈடுபட்டுள்ள பணிகளுக்கு இடையூறு இன்றி செயல்படலாம். இப்பணிக்கு மாத ஊதியம் எதுவும் இல்லை.

பணிநாட்களுக்கு உரிய படித்தொகை மட்டும் பெற்றுத்தரப்படும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button