அறந்தாங்கி அருகே செங்கல் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது

அறந்தாங்கி அருகே செங்கல் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 35), லாரி டிரைவர். இவர் சேலத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கட்டுமாவடி பகுதிக்கு செங்கல் லோடு ஏற்றி சென்றார்.
அறந்தாங்கி அருகே வீரராகவபுரம் பிரிவு ரோட்டில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக சென்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி பலத்த சேதம் அடைந்தது. இதில், பிரபு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி னார்.
இந்த விபத்து தொடர்பாக நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1




