ஆவுடையார்கோவில் அருகே மின்னல் தாக்கி பெண் பலி.

ஆவுடையார்கோவில் அருகே மின்னல் தாக்கி பெண் பலி.
ஆவுடையார்கோவில், அருகே சின்னவீரமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி அஞ்சலை (வயது 52). இவர் நேற்று வயலுக்கு சென்றிருந்தார்.

அப்போது அப்பகுதியில் மழை பெய்தது. இதையடுத்து அஞ்சலை வயல்காட்டில் உள்ள மரத்தின் கீழ் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்.
அப்போது மின்னல் தாக்கியதில் அஞ்சலை சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





