மீமிசல் அருகே 58 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது.

மீமிசல் அருகே 58 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மீமிசல் அருகே ஆலத்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் ஆவுடையார்கோவில் அருகே ஒக்கூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 58 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதன்மதிப்பு ரூ.24 ஆயிரம் ஆகும். இதையடுத்து, அவரை மீமிசல் போலீசார் கைது செய்தனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1




