புதுக்கோட்டை மாவட்டத்தில் 489 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 29-ந் தேதி நடக்கிறது

புதுக்கோட்டை, மார்ச்.25-
புதுக்கோட்டை மாவட்டத்தில் 489 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 29-ந் தேதி நடக்கிறது
உலக தண்ணீர் தினமான கடந்த 22-ந் தேதியன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது.
வருகிற 29-ந் தேதி அன்று காலை 11 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது மற்றும் இதர பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன.
மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிகளவில் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.





